நடிகர் ‘கார்த்தி’ குடும்பத்தை வைத்து கச்சேரி பாடும் ‘பயில்வான் ரங்கநாதன்’ –விளாசும் ரசிகர்கள்.

photo

நடிகரும் பத்திரிக்கையாளருமான  பயில்வான் ரங்கநாதன் பிரபலங்கள் குறித்து பல சர்சையான  கருத்துகளை கூறி மிக பிரபலமானவர். அந்த வகையில் தற்போது நடிகர் கார்த்தி வீட்டு விஷயம் குறித்து பேசி மீண்டும் சர்சை வளையத்திற்குள் சிக்கியுள்ளார்.

photo

‘பருத்திவீரன்’ படம் மூலமாக சினிமாவிற்குள் ஹீரோவாக நுழைந்து முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் கார்த்தி. சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது கடின உழைப்பால்தான் இன்றுவரை நிலைத்து நிற்கிறார். சமீபத்தில் கூட பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பலருக்கும் பிடித்த ‘வந்தியதேவன்’ கதாபாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியிருந்தார். இந்த நிலையில் கார்த்திக்கு ரஞ்சினி என்ற பெண்ணுடன் திருமணமாகி கந்தன் மற்றும் உமையாள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இப்படி சினிமா மற்றும் சொந்த வாழ்கையில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் கார்த்தியின் வீட்டில் பிரச்சனை நடப்பதாக பயில்வான் கூறியுள்ளார்.

photo

அதாவது கார்த்தி படங்களில் நடிக்கும் போது கதாநாயகிகளுடன்ரொமான்ஸ் செய்வது,  படுக்கையறைகாட்சிகளில் நடிப்பது என ஓவராக நெருக்கம் காட்டுவதால் கடுப்பான ரஞ்சினி, "உங்கள் அண்ணன் சூர்யா மாதிரி கதாநாயகிகளுடன் நெருக்கம் இல்லாமல், இல்லை கதாநாயகியே இல்லாமல் நடிக்க மாட்டீர்களா" என கேட்டு சண்டை போடுவதாக பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய வீடியோவில் கூறியுள்ளார்.  இதனை பார்த்த ரசிகர்கள் நல்லா இருக்கும் வீட்டில் இப்படி வில்லுபாட்டு பாடுறீயேபா…….. என சாடி வருகின்றனர்.

Share this story