ஆர்யாவிற்கு ஜோடியாகும் ‘பீஸ்ட்’ நடிகை.. ‘பையா 2’ புதிய அப்டேட்

paaiya
ஆர்யா நடிப்பில் உருவாகும் ‘பையா 2’ படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

ஆக்ஷன் அதிரடிக்கு பெயர் போன இயக்குனர் லிங்குசாமி. அவர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் காதல் திரைப்படம் ‘பையா’. இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக தமன்னா நடித்திருந்தார். முழுக்க முழுக்க ஹைவேயில் எடுக்கப்பட்ட இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

paaiya

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு 12 ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாம் பாகத்தை  உருவாகவுள்ளது. இந்த படத்திற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. இந்த படத்தில் கார்த்திக்கு பதில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

paaiya

இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவில் பிரபல நடிகையாக இருக்கும் அவர், தெலுங்கு, தமிழ், இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக தமிழில் விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story