மீண்டும் இணைந்த ‘பிச்சைக்காரன்’ கூட்டணி...

vijay antony

இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி மீண்டும் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

இசையமைப்பாளர், நடிகர், தயாராரிப்பாளர்  என பன்முக தன்மை கொண்டவர் விஜய் ஆண்டனி, இவர் தற்போது ’மார்கன்’ மற்றும் ‘சக்தி திருமகன்’ ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ‘லாயர்’ படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார். இதனை விஜய் ஆண்டனியே தயாரிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதனிடையே புதிய படமொன்றை அறிவித்துள்ளார் விஜய் ஆண்டனி. சசி இயக்கவுள்ள இப்படத்தினை அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. விஜய் ஆண்டனி – சசி இருவரும் இணைந்த ‘பிச்சைக்காரன்’ படம் பெரும் வரவேற்பைப் பெற்றது . sasi

தற்போது இப்படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன. இதில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து அஜய் திஷானும் இணைந்து நடிக்கவுள்ளார். இவர் ’மார்கன்’ படத்தில் வில்லனாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story