அசத்தல் காட்சிகளோடு ‘பிகினிங்’ படத்தின் புது புரோமோ வெளியீடு.

photo

லிங்குசாமி தயாரிப்பில், ஜெகன் விஜயா எழுதி இயக்கியுள்ள, திரைப்படம் " பிகினிங்",  இந்தப் படம் ஆசியாவின் முதல் 'ஸ்பிளிட் ஸ்கிரீன்' திரைப்படமாக உருவாகியுள்ளது.

photo

இந்த படத்தில் வினோத் கிஷன் மற்றும் கௌரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, அவர்களோடு இணைந்து சச்சின், ரோகிணி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார், கே.எஸ். வீர குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், சிஎஸ் பிரேம் குமார் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

photo

இந்த படம் ஆசியாவின் முதல் ஸ்பிளிட் திரைப்படமாக உருவாகியுள்ளதால் படம் நிச்சயம் ரசிகர்களை ஈர்க்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர்.  அதாவது ஸ்பிளிட் திரைப்படம் என்றால்,படத்தின் காட்சிகள் ஒரே திரையில் பாதி பாதி  காட்சிகளாக ஒரே சமயத்தில் ஒளிபரப்பாகும். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்பை அதிகரித்த நிலையில், படம் இம்மாதம் 26ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர். தற்போது படத்தின் புத்தம் புது புரோமோ காட்சி வெளியாகியுள்ளது.


 

Share this story