மைதாவை சாப்பிடாமல் தவிர்த்தால் நம் உடல்நலனில் என்ன நன்மை உண்டாகும் தெரியுமா ?

Parotta

பொதுவாக இன்று நாம் சாப்பிடும் ரொட்டி, பிஸ்கட், புரோட்டா , பேக்கரி திண்பண்டங்கள் என அனைத்திலும் மைதா முக்கிய பொருளாக உள்ளது.இந்த மைதா சேர்க்கப்பட்ட உணவு பொருட்களை நாம் சாப்பிடுவதால் நம் உடல் நலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது .இந்த மைதாவை சாப்பிடாமல் தவிர்த்தால் நம் உடல்நலனில் என்ன நன்மை உண்டாகும் என்று இந்த பதிவில் நாம் காணலாம் 

1.மைதா சேர்க்கப்பட்ட உணவை நாம் உண்பதால் நம் உடலில்  சர்க்கரை அளவு, கொழுப்பு அளவை அதிகரிப்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.
2.மேலும் மைதா சேர்க்கப்பட்ட உணவை நாம் உண்பதால் ரத்தத்தில் எல்டிஎல் என்ற கெட்ட கொழுப்பு அளவை அதிகரிக்கச் செய்து, இதயத்துக்கான ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தி விடும்.
3.வைட்டமின், தாது உப்புக்கள், புரதம் போன்ற ஊட்டசத்துக்கள் இல்லாத ரசாயனம் நிறைந்த மைதா உண்பதால், நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
4. நம்முடைய உணவு முறையில் மைதாவை தவிர்க்கும் போது நம் உடலில் செரிமான பிரச்சனையின்றி வாழ முடியும்.
5.நம் உணவு முறையில் மைதாவை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது உடலில் குளுக்கோஸாக மாற்றப்பட்டு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது.
6. மைதாவை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது கலோரிகள் அதிகளவில் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. 
7..  மைதாவை உணவில் சேர்த்து உட்கொள்ளும் போது உடலில் ஆற்றலை செயலிழக்கச் செய்கிறது. எனவே மைதா போன்ற பொருள்களை தவிர்ப்பது நல்லது.
8.மைதா  மாவுக்குப் பதிலாக தினை மற்றும் பிற ஆரோக்கியமான தானியங்களை பயன்படுத்துவதன் மூலம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெறமுடியும்.
9.இந்த ஆரோக்கிய கேடு உண்டாக்கும் மைதாவைத் தவிர்க்கும் போது, இது போன்ற பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படும்.
10.எனவே மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவு கலந்த உணவுபொருட்களை உண்பதை தவிர்த்து ஆரோக்யமான தானிய உணவு வகைகளை உணவில் சேர்ப்பதன் மூலம் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.    

Share this story