‘கருடன்’ தெலுங்கு ரீமேக்கான ‘பைரவம்’!

bhiaravam

‘கருடன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தான் ‘பைரவம்’ என்பது உறுதியாகி இருக்கிறது.

பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘பைரவம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை பலரும் பகிர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தார்கள். இது தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘கருடன்’ படத்தின் ரீமேக் என்பது உறுதியாகி இருக்கிறது. இதனை ‘நந்தி’ படத்தினை இயக்கிய விஜய் கனகமெடலா இயக்கி வருகிறார்.

இதில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ், மஞ்சு மனோஜ், நரா ரோஹித், ஆனந்தி, அதிதி ஷங்கர், திவ்யா பிள்ளை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சூரி கதாபாத்திரத்தில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் நடித்திருக்கிறார். மற்றவர்கள் என்ன கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் என்பதை படக்குழுவினர் இன்னும் அறிவிக்கவில்லை.

தமிழில் துரை.செந்தில்குமார் இயக்கத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கருடன்’. லார்க் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. வசூல், விமர்சனம் என அனைத்திலுமே கொண்டாடப்பட்டது.

Share this story