வந்தாச்சு ‘பாரதி கண்ணம்மா சீசன் 2’ – வெளியானது அசத்தல் புரொமோ.

photo

‘பாரதி கண்ணம்மா’ தொடரின் இரண்டாம் பாகத்திற்கான புரொமோ இன்று வெளியாகியுள்ளது.

photo

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி தனக்கென ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள தொடர் பாரதிகண்ணம்மா.  பல போராட்டத்திற்கு பிறகு ஒரு வழியாக பாரதியும் கண்ணம்மாவும் இணையும் அந்த அழகான தருணம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. ஆம் பல தடைகளை தாண்டி பாரதிக்கும் கண்ணம்மாவிற்கு திருமண வைபவம் நடக்கிறது. இத்தோடு இனிதே தொடர் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த பாகத்திற்கான புரொமோ தற்போது வெளியாகியுள்ளது.

photo

இந்த புரொமோவில் கண்ணம்மாவாக பழைய கண்ணம்மாவான வினுஷா தேவியே நடிக்க  உள்ளார். ஆனால்  பாரதி  மாறியுள்ளார், புதிய பாரதியாக சிபு சூரியன் இணைந்துள்ளார். இதற்கு முன் சிபு சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகி  ஹிட்டன ‘ரோஜா’ தொடரில் அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

photo

புரொமோவில் பிப்ரவரி 6 முதல் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Share this story