நான் 'பொன்னியின் செல்வன்' எடுத்திருந்தேனா சொதுப்பியிருப்பேன் - பாரதிராஜா ஓபன் டாக் !

ps2

'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தை நான் எடுத்திருந்தால் கண்டிப்பாக சொதப்பியிருப்பேன் என இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். 

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது.இதையொட்டி இப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்துக்கொண்டனர். 

ps2

அந்த இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இயக்குனர் பாரதிராஜா பேசியபோது, நானும் பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க முயற்சித்தேன். நான் 9-ஆம் வகுப்பு படிக்கும் போதே பொன்னியின் செல்வன் கதையை படித்துவிட்டேன். இந்த படத்தை எம்.ஜி.ஆர் படமாக எடுக்க விரும்பினார். என்னை இயக்கவும், கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோரை நடிக்க வைக்கவும் சொன்னார். குறிப்பாக கமலை வந்தியதேவன் கதாபாத்திரத்திலும், குந்தவை கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவி நடிக்க வைக்க நினைத்தார். 

ps2

ஆனால் அந்த நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அது நடக்காமல் போனது.  நல்ல வேளையாக நான் அந்த படத்தை எடுக்கவில்லை. எடுத்திருந்தா சொதுப்பியிருப்பேன்  என்பதால் தான் கடவுள் அந்த படத்தை மணிரத்னத்தை எடுக்க வைத்திருக்கிறார். பொன்னியின் செல்வன் படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அனைத்தும் அழகாக இருக்கிறது. இதை பார்ப்பதற்கு கல்கி உயிரோடு இல்லை என்று கூறினார். 

Share this story