31 ஆண்டுகளுக்கு பின், இயக்குநர் இமயத்தின் படத்தில் இசைஞானியின் பாடல்....

31 ஆண்டுகளுக்கு பின் மார்கழி திங்கள் என்ற படத்தின் மூலம் பாரதிராஜாவும், இளையராஜாவும் இணைந்துள்ளனர். இப்படத்தின் பாடல் பதிவு தொடங்கியுள்ளது.
இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மார்கழி திங்கள்'. இப்படத்தின் மூலம் நடிகர் மனோஜ் பாரதிராஜா இயக்குநராக அறிமுகம் ஆகிறார். புதுமுகங்கள் நடிக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடிக்க உள்ளார். இந்நிலையில், இப்படத்தின் மூலம் 31 ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிராஜாவும் இசைஞானி இளையராஜாவும் இணைந்துள்ளனர். பாராதிராஜாவும், இளையராஜாவும இணைந்து பணியாற்றிய கடைசி திரைப்படம் 'நாடோடி தென்றல்' ஆகும். தற்போது, மார்கழி திங்கள் படத்தில் இளையராஜா இசையில் பாடல் பதிவு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இது தொடர்பான வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
#IyakkunarImayam @offBharathiraja - #Maestro @ilaiyaraaja reunite after 31 years for #MargazhiThingal
— Actor Kayal Devaraj (@kayaldevaraj) September 5, 2023
Teaser Dropping Soon✨
Prod by @Dir_Susi 's #VennilaProductions
Dir by @manojkumarb_76 @shyamshelvan @maalu1815 @vanchijackson @editorthiyagu @shobimaster pic.twitter.com/zIoeYTI42A
இப்பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இசைக்கு முக்கியத்துவம் கொண்ட இக்கதையில் இளையராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் முக்கிய பங்காற்றும் என்று மனோஜ் பாரதிராஜா கூறியுள்ளார். மார்கழி திங்கள் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.