அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வௌியிட்ட பாரதிராஜா

அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வௌியிட்ட பாரதிராஜா

அமீருக்கு ஆதரவு தெரிவித்துள்ள இயக்குநர் பாரதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வௌியிட்ட பாரதிராஜா

18 ஆண்டுகள் கழித்து பருத்திவீரன் பட இயக்குநர் அமீர் மற்றும் அப்பட தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா இடையே உள்ள பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், சமுத்திரகனி, சசிகுமார், சுதாகொங்காரா, நடிகர் பொன்வண்ணன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேல் ராஜாவுக்கு எதிராகவும் கண்டனத்தை பதிவு செய்தும் உள்ளனர். பிரபலங்களான சமுத்திரக்கனி, சசிகுமார் போன்றோரும் அமீருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். 
இயக்குநரும், நடிகருமான கரு. பழனியப்பன் அமீருக்கு ஆதராக பதிவிட்டு அறிக்கை ஒன்றை  வெளியிட்டிருந்தார். அதில், பொதுவெளியில் அமீரிடம் ஞானவேல் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியிருந்தார். 

அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வௌியிட்ட பாரதிராஜா

இந்நிலையில், இயக்குநரும் நடிகருமான பாரதிராஜா அமீருக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பருத்திவீரன் படம் தொடர்பாக ஞானவேல் ராஜா பேசியது தன் கவனத்திற்கு வந்ததாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் கூறியுள்ளார். ஒரு படைப்பாளியின் புகழுக்கும், பெயருக்கும், படைப்புக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஞானவேல் ராஜா பேசியிருப்பது கண்டிக்கப்படக்கூடியது என கூறியுள்ளார். மேலும், இந்த பிரச்சனைக்கு சுமூகமாக பேசி தீர்வு காண வேண்டும் என்றும் பாரதிராஜா வலியுறுத்தி உள்ளார். 

Share this story