இயக்குனராக அறிமுகமாகும் பாரதிராஜாவின் மகன்... முதல் படத்திலேயே தந்தையை இயக்குகிறார் !

manoj
இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ், அவரது தந்தையை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக இருக்கும் பாரதிராஜாவின் மகன் மனோஜ்.  கடந்த 1999-ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான ‘தாஜ்மகால்’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு கடல் பூக்கள், வருஷமெல்லாம் வசந்தம் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் தந்தை போன்று சினிமாவில் அவர் ஜொலிக்கவில்லை.

manoj

பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஈஸ்வரன், மாநாடு ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பம்பாய்’ உள்ளிட்ட சில படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றிய மனோஜ், தற்போது புதிய படம் ஒன்றின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்கிறார். இதுதவிர முழுக்க முழுக்க புதுமுகங்கள் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். 

இந்த படத்தை பிரபல இயக்குனர் சுசீந்திரன், தனது வெண்ணிலா பிரொக்ஷன்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிக்கிறார். இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமாக உருவாகும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இன்னும் தலைப்பு வைக்காத இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டரை வரும் மார்ச் 31-ஆம் தேதி தமிழ் சினிமாவின் 10 முன்னணி இயக்குனர்கள் வெளியிட உள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் இறுதியில் தொடங்கவுள்ளது. முதன்முறையாக இயக்குனராக அறிமுகமாகும் மனோஜ், தன்னுடைய குருநாதர் மணிரத்னத்திடம் ஆசிபெற்றுள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது. 

Share this story