பாரதிராஜாவின் உயிர் தோழர் மறைந்தார்

பாரதிராஜாவின் உயிர் தோழர் மறைந்தார்

பாரதிராஜாவின் 'என் உயிர் தோழன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் பாபு உயிரிழந்தார். 

பாரதிராஜாவின் என் உயிர் தோழன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் பாபு. அதனை தொடர்ந்து விக்ரமன் இயக்கத்தில் பெரும்புள்ளி, கோபி பீம்சிங் இயக்கத்தில் தாயம்மா, மற்றும் பொண்ணுக்கு சேதி வந்தாச்சு உள்ளிட்ட சில  படங்களில் அவர் நடித்துள்ளார். 

பாரதிராஜாவின் உயிர் தோழர் மறைந்தார்

பொள்ளாச்சியில் 'மனசார வாழ்த்துங்களேன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சண்டை காட்சியின் போது  ஏற்பட்ட விபத்து காரணமாக அவர் நடக்க முடியாமல் படுத்த படுக்கையானார். 20 ஆண்டுகளுக்கு  மேலாக படுத்த படுக்கையிலேயே சிகிச்சை பெற்று வந்த்தார். இந்நிலையில் சென்னையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள இல்லத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

Share this story