‘விடுதலை’ படத்தால் மன அழுத்தம் தான் வந்தது – ‘பவானி ஸ்ரீ’ சொல்வது என்ன!

photo

விடுதலை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து படக்குழு தங்கள் அனுபவங்களை சமூகவலைதளத்தில் பகிந்து வருகின்றனர். அந்த வகையில் படத்தின் கதாநாயகியான பவானி ஸ்ரீ படத்தில் நடித்து மன அழுத்தம் வந்தது என  தனது அனுபவம் குறித்து பகிந்துள்ளார்.

photo

சூப்பர் ஹிட் இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக தயாராகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் கடந்த மாதம் 31ஆம் தேதி வெளியானது. இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானிஸ்ரீ நடித்திருநதார்.  பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷின் தங்கைதான் பவானி ஸ்ரீ. இவரது முதல் திரைப்படம் ‘விடுதலை’. ஆனால் அவரது நடிப்பை பார்த்து ‘இது அவரது முதல் போல இல்லை நடிப்பில் மிரட்டி இருக்கிறார்’ என பலரும் கூறி வருகின்றனர்.

photo

இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் விடுதலை படம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார் அதில், ஸ்பாட்டில் வெற்றிமாறன் சார் காட்சியையும் அதில் என்னிடம் அவர் எதிர்பார்ப்பதையும் விளக்கிச் சொல்லும்போதே நாம் எப்படி அந்தக் காட்சியில் பேசணும் நடக்கணும் என்று தெரிந்துவிடும். இயற்கை வளங்கள் ,மலைவாழ் மக்களின் வாழ்க்கை, துன்ப, துயரங்கள், இப்போதும்கூட எவ்வளவு கஷ்டங்களைச் சந்திக்கிறார்கள் என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார். அந்தக் காட்சிகளில் நடிக்கும்போது மன அழுத்தம்தான்: அப்படிப்பட்ட ஒரு மலைவாழ் பெண்ணாக இருந்தாலும் தமிழரசி என்பவள் இயலாமை, மன வலிமை இரண்டுமே உள்ள ஒரு கதாபாத்திரம் என்பதை எனக்குச் சொன்னார். போலீஸ் இந்த அளவுக்கு டார்ச்சர் செய்திருக்கிறார்களா என்று சித்ரவதைக் காட்சிகளில் நடித்தபோது எனக்கு மன அழுத்தம் உருவாகிற அளவுக்கு எண்ணினேன். கிளிசரின் தேவைப்படாமலேயே அழுதேன்" என  தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.



 

Share this story