யோகி பாபு படத்தில் நடிக்கும் பூமிகா
1706201097048
நடிகை பூமிகா 2000-ம் ஆண்டு விஜய் நடித்து வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். முதல் படத்திலேயே அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதையடுத்து ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இந்நிலையில் சில வருடங்கள் சினிமாவில் இருந்து விலகி இருந்த பூமிகா அதையடுத்து குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் 'கண்ணை நம்பாதே' படத்தில் அவர் ரீ என்ட்ரி கொடுத்தார்.
தற்போது யோகி பாபு நடிப்பில் உருவாகும் ஸ்கூல் திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார். வித்யாதரன் மற்றும் மஞ்சு இணைந்து தயாரிக்கும் இப்படத்தை ஆர்.கே.வித்யாதரன் இயக்குகிறார்.