பெரிய பட்ஜெட் படங்கள் 8 வாரங்களுக்கு பின்தான் ஓடிடியில் ரிலீஸ்- தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி

தயாரிப்பாளர்

பெரிய பட்ஜெட் படங்கள் 8 வாரங்களுகளுக்கு பின்தான் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

OTT Streaming & Theater Release Movies List of January 25th, 2024 in Tamil:  Blue Star, Fight Club, Singapore Saloon and more | இந்த வாரம் (25 ஜனவரி  2024) தமிழ் ஓடிடி ஸ்ட்ரீமிங் & தியேட்டர் ரிலீஸ் ...

திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட நடப்பு விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள், கலந்து கொண்ட கூட்டுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. 

அக்கூட்டத்தில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் முதல் தீர்மானமாக முன்னனி நட்சத்திரங்கள் நடிக்கும் திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி 8-வாரங்களுக்கு பிறகே OTT- தளங்களில் வெளியிட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Share this story