கழுத்தில் தாலியுடன் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. திடீர் திருமணமா ?

abhirami

கழுத்தில் தாலியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு நடிகை அபிராமி வெங்கடாச்சலம் ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளார். 

மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். மிஸ் தமிழ்நாடு பட்டத்தை வென்றுள்ள இவர், சன் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணிபுரிந்துள்ளார். ஆனந்த் சங்கர் இயக்கிய ‘நோட்டா’ படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். அதன்பிறகு காற்று வெளியிடை, விக்ரம் வேதா ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

abhirami

பின்னர் நடிகர் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதபாத்திரத்தில் நடித்தார்.  இதையடுத்து பிக்பாஸ் சீசன் 3-ல் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆரம்பத்தில் சாதாரண போட்டியாளராக நுழைந்த அபிராமி, சகப்போட்டியாளர் முகேனுடன் ஏற்பட்ட காதல் கிசுகிசுவால் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். தற்போது 'லியோ' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

நிலையில் நடிகை அபிராமி வெங்கடாச்சலம் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் தாலியுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள், அபிராமி திருமணம் செய்துக்கொண்டாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

Share this story