அச்சச்சோ... ஜிபி முத்துக்கு என்னாச்சு... பதறிய ரசிகர்கள் !

gp muthu

டிக் டாக் பிரபலம் ஜிபி முத்து உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 டிக்டாக் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர் ஜி.பி.முத்து. இவர் பதிவிடும் வீடியோக்களை பல லட்சணக்கான ரசிகர்கள் பார்த்து ரசித்தனர்.  ஜி.பி.முத்து, பேசும் தென் மாவட்டத்திற்கு உரித்தான எதார்த்தமான தமிழ் பேச்சும், அப்பாவி தன்மையும் அவரை இந்த உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளது.

gp muthu

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியை சேர்ந்த இவர், பழைய கதவு, ஜன்னல் உள்ளிட்டவைகளை வாங்கி அதனை பழுது பார்க்கும் மரக்கடை ஒன்றை வைத்திருந்தார். டிக்டாக் மூலம் பிரபலமானவை அடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்றார். சில நாட்கள் மட்டுமே இருந்த அவர், சில காரணங்களால் வீட்டை விட்டு வெளியேறினார். தற்போது விஜய் டிவியின் பல்வேறு ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி வருகிறார். இதுதவிர சினிமா படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

gp muthu

இந்நிலையில் ஜிபி முத்து உடல் நலக்குறைவால் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளார்‌. அவர் படுத்தபடுக்கையாக இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஜிபி முத்துவிற்கு என்னாச்சு என கேள்வி எழுப்பி வருகின்றனர்.  

Share this story