குலுங்க குலுங்க சிரிக்கும் வைக்கும் ஸ்னீக் பீக் காட்சி... எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் பிக்பாஸ் கவினின் ‘டாடா’ !

dada

 கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாடா’ படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியிடப்பட்டுள்ளது. 

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாடா’. அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் பிக்பாஸ் கவின் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா நடித்துள்ளார். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.

dada

கவினுடன் இணைந்து இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் இப்படம் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

dada

சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு குழந்தை வளர்ப்பதில் உள்ள பிரச்சனைகள் குறித்து இப்படம் பேசவுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் ஸ்னீக் காட்சி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க காமெடியில் உள்ள இந்த காட்சி படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.  

Share this story