“இந்த ஆட்டியூட் மயிலெல்லாம் இங்க காட்டாத’’ - கவின் சூப்பரான ‘டாடா’ டிரெய்லர் வெளியீடு !

கவின் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாடா’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் கவின் மற்றும் மலையாள நடிகை அபர்ணா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘டாடா’. அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் திருமணத்திற்கு பிறகு குழந்தை வளர்ப்பதில் உள்ள பிரச்சனை குறித்து காட்டுள்ளது. அதாவது கல்லூரியில் படிக்கும் அப்பா ஒரு குழந்தையை வளர்ந்தால் எப்படி என்பதுதான் இப்படத்தின் கதைக்களமாக உள்ளது. இந்த டிரெய்லர் வரவேற்பை பெற்றுள்ளது.
கவினுடன் இணைந்து இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்துள்ளார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.