ஹோப்பி பர்த்டே கொண்டாடிய லாஸ்லியா.. நண்பர்களுடன் இருக்கும் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் !

losliya

 தனது நண்பர்களுடன் நடிகை லாஸ்லியா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

losliya

தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார் லாஸ்லியா. பிக்பாஸ் மூலம் புகழ்பெற்ற நடிகையாக மாறி அவர், இங்கையை சேர்ந்தவர். அங்கு தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக கலந்துக்கொண்டார்.

losliya

பிக்பாஸ் பிறகு 'ஃப்ரெண்ட்ஷிப்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக நடித்திருந்தார்.  இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் ஆரி, புதுமுக ஹீரோ ஒருவர், தர்ஷன் என அடுத்தடுத்து கமிட்டாகியுள்ளார். 

losliya

இந்நிலையில் தனது பிறந்தநாளை நடிகை லாஸ்லியா கொண்டாடினார். இதையொட்டி தனது நண்பர்களுடன் கேக் வெட்டி எளிமையாக தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார். இந்த கொண்டாட்டத்தின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 

losliya

 

Share this story