பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படம்.. பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு !

mugen rao

 பிக்பாஸ் முகேன் ராவ் நடிக்கும் புதிய படத்தின் படப்படிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் முகேன் ராவ். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னர் மலேசியாவில் ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களால் ஈர்க்கப்பட்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ‘வெப்பம்’ இயக்குனர் அஞ்சனா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்தார். 

mugen rao

அந்த படத்திற்கு பிறகு கவின் எம் இயக்கத்தில் உருவான ‘வேலன்’ படத்தில் நடித்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்திற்கு மீண்டும் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் ‘மதில் மேல் பூனை’ படத்தில் நடித்தார். 

mugen rao

முகேன் ராவ் நடித்த திரைப்படங்கள் பெரிய அளவில் கைக்கொடுக்காத நிலையில் புதிய படம் ஒன்றில் முகேன் ராவ் நடிக்கவுள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கவின் இயக்கவுள்ளார். மேலும் இந்த படத்தில் கவினுடன் இணைந்து ஆதித்யா கதிர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ‘டாடா’ படத்தின் இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் ஜி பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.  

 

Share this story