‘இதெல்லாம் ஒரு கேஸ்.......’-சலித்துக்கொள்ளும் தனலெட்சுமி.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் வீக்ளி டாஸ்க்காக “பிக்பாஸ் நீதிமன்றம் “டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஹவுஸ் மேட்ஸ் தங்களின் வழக்குகளை பிக்பாஸ் வீட்டில் மெயின் டோர் முன்பு உள்ள கேமரா முன்பாக பதிவு செய்ய வேண்டும். குற்றம்சாட்டப்பட்ட நபர் வழக்கறிஞரை தேர்வு செய்து அவருக்கான வழக்கை தயார் செய்ய வேண்டும்.இந்த வாரத்தில் மிகவும் பரபரபாகவும் , விறுவிறுப்பகவும் செல்லும் இந்த டாஸ்கில், இன்றைக்கான புரோமோ3 தற்பொழுது வந்துள்ளது.
அதுபடி கதிரவன் 'வீட்டில் சப்பிட்ட பிறகு தட்டு கழுவப்படவில்லை , குடித்த காபி கப் எல்லாம் அப்படி அப்படியே இருக்கிறது' என வழக்கு தொடுக்கிறார், இந்த வழக்கை பிக்பாஸ் வீட்டின் இந்த வார தலைவரான மைனா நந்தினி மீது தொடுக்கிறார். ஆனால் ‘தலைவர் பொறுப்பில் இருக்கும் மைனா அதற்கு பொறுப்பு ஏற்க முடியாது, யார் இந்த செயலை செய்கிறர்களோ அவர்களை குறிப்பிட்டு சொல்லுங்கள்’ என பிக்பாஸ் சொல்கிறார்.
உடனேயே இந்த வழக்கை பொதுநல வழக்காக தாக்கல் செய்யும் கதிரவன் அதற்கு மணிகண்டாவை வழக்கறிஞராக நியமனம் செய்கிறார். அனைவரும் லிவ்விங் ஏரியாவில் அமர ,வழக்கு குறித்து கதிரவனனும், வழக்கறிஞரும் விவரிக்கின்றனர். இதனால அதிருப்தியடைந்த தனலெட்சுமி “அது எப்படி பாத்திரம் கழுவுன நாங்கலாம் இங்க உக்காந்து இருக்கோம், இதெல்லாம் ஏத்துக்கவே முடியாது, இதெலாம் ஒரு கேஸ்” என சலித்துக்கொள்கிறார்.