பிக்பாஸ் ஷாரிக்கின் ‘நேற்று இந்த நேரம்’ பட டிரைலர்.

photo

பிக்பாஸ் மூலமாக பிரபலமான ஷாரிக் ஹாசன் நடிப்பில் தயாரான ‘நேற்று இந்த நேரம்’ படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

சாய் ரோஷன் ஆர்.கே எழுதி இயக்கியுள்ள படம் ‘நேற்று இந்த நேரம்’. த்ரில்லர் கதைகளத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஷாரிக்குடன் இணைந்து, ஹரிதா மற்றும் மோனிகா ரமேஷ் ஆகிய இருவர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்கு கெவின் என் இசையமைத்துள்ளார். சென்னை மற்றும் ஊட்டியில் படமாக்கப்பட்ட இந்த படத்தின் கதை பார்ட்டியை கொண்டாட சென்ற இடத்தில் நண்பர்கள காணாமல் போகின்றனர் அதை திகில் கலந்த கதைகளத்தில் சொல்லியுள்ளார் இயக்குநர். இந்த படத்தின் டிரைலர்தான் தற்போது வெளியாகியுள்ளது. படம் வரும் ஜனவரி 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

Share this story