இந்த வாரம் பிக்பாஸ் 8 வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்.. யாரு தெரியுமா?
1731232538000
பிக்பாஸ் 8, விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு ஷோ.100 நாட்கள், போட்டி, கலாட்டா, சண்டை, சர்ச்சை, கோபம், Gossip என எல்லாம் கலந்த கலவையாக நிகழ்ச்சியின் கான்செப்ட் உள்ளது. கடந்த அக்டோபர் 6ம் தேதி ஆளும் புதுசு, ஆட்டமும் புதுசு என்ற கான்செப்டில் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வந்தது.ரவீந்தர், அர்னவ் மற்றும் தர்ஷா குப்தா என இதுவரை 3 பேர் வெளியேற கடந்த வாரம் தீபாவளி ஸ்பெஷலாக நோ எலிமினேஷன் என அறிவிக்கப்பட்டது. கடந்த வாரம் புதுவரவாக 5 போட்டியாளர்கள் உள்ளே நுழைந்த நிலையில் ஆட்டமும் சூடு பிடித்துள்ளது. தற்போது என்ன தகவல் என்றால் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியுள்ளது விஜய் டிவியில் கொஞ்சும் தமிழ் பேசும் பிரபலமாக வலம் வந்த சுனிதா தான் வெளியேறியுள்ளாராம்.