விஜய்யின் ‘லியோ’-ல் இணைந்த பிக்பாஸ் நடிகை.. லோகேஷுடன் இருக்கும் புகைப்படம் வைரல் !

abhirami

விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ‘லியோ’ படத்தில் பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மாடலிங் துறையின் ஆர்வத்தால் சினிமாவிற்கு வந்தவர் நடிகை அபிராமி வெங்கடாசலம். ‘நோட்டா’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு ‘காற்று வெளியிடை’, ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். 

abhirami

பின்னர் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். இருப்பினும் வாய்ப்பு கிடைக்காததால் விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார். பிக்பாஸ் நிகழ்ச்சி சினிமாவை விட அபிராமிக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்தது. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் விஜய் நடிப்பில் உருவாகும் ‘லியோ’ படத்தில் நடிகை அபிராமி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை உறுதிப்படுத்தும் விதமாக இயக்குனர் லோகேஷ் கனகராஜூடன் அபிராமி இருக்கும் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது. 

 

 

Share this story