கௌதம் கார்த்திக்கு ஜோடியாகும் பிக்பாஸ் நடிகை.. ‘கிரிமினல்’ புதிய அப்டேட்

criminal

கௌதம் கார்த்திக் நடிக்கும் ‘கிரிமினல்’ படத்தின் கதாநாயகி அறிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரையைப் பின்னணியாக கொண்டு க்ரைம் த்ரில்லரில் உருவாகும் திரைப்படம் ‘கிரிமினல்’. இந்த படத்தில் நடிகர் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கிறார். வித்தியாசமான திரைக்கதையில் உருவாகும் இப்படத்தை இயக்குனர் தட்சிணாமூர்த்தி ராமர் இயக்கி வருகிறார்.

criminal

பாரா பிக்சர்ஸ் மற்றும் பிக் பிரிண்டர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர். சாம் சிஎஸ் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் போலீஸ் அதிகாரியாகவும், கௌதம் கார்த்திக் குற்றவாளியாகவும் நடித்து வருகின்றனர். நடிகர் கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். 

criminal

இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகை ஜனனி இணைந்துள்ளார்.  பாலாவின் ‘அவன் இவன்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அவர், பாகன், தெகிடி, அதே கண்கள், பலூன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். அதேபோன்று பிக்பாஸ் கலந்துக்கொண்டு மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story