பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸின் அடுத்த பட அப்டேட்...!

பிக் பாஸ் புகழ் பெற்ற பாலாஜி முருகதாஸ்-ன் அடுத்த பட அப்டேட் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களுக்கு பரீட்சையமானவர் பாலாஜி முருகதாஸ். கடைசியாக இவர் நடிப்பில் ஃபயர் என்ற திரைப்படம் வெளியானது. 2020 ஆம் ஆண்டு நடந்த நாகர்கோவில் காசி என்ற வழக்கை மையப்படுத்தி கதைக்களம் அமைக்கப்பட்டது. திரையரங்குகளில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது பாலாஜி முருகதாஸ்-ன் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
சிதம்பரம் ஏ. அன்பழகன் இயக்கும் படத்தில் பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடிக்கிறார். விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் படத்துக்கு ‘ரன்னர்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தை, ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர்.துரை ராஜேஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு தர்ஷன் ரவிகுமார் இசை அமைக்கிறார். இதன் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை சிலம்பரசன் வெளியிட்டார்.
படம் பற்றி இயக்குநர் சிதம்பரம் ஏ.அன்பழகன் கூறும் போது, “இந்தப் படத்துக்காக பாலாஜி முருகதாஸ் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பயிற்சியாளர்களிடமிருந்து ஓட்டப் பயிற்சி பெற்று வருகிறார். இரவு 3 மணிக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு, காலை 5.30 மணிக்குத் தடகள பயிற்சியில் இறங்குவது அவரது அட்ட வணையாக உள்ளது. அவரது பொறுப்பும், கடின உழைப்பும் திரையில் கண்டிப்பாகப் பிரதிபலிக்கும்” என்றார்.