நடிகர் விஜய் குறித்து நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ள பிக் பாஸ் மாயா...!

maya

`கோட்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜயை சந்தித்தது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பிக் பாஸ் மாயா நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.`விக்ரம்' திரைப்படம் இவரை கோலிவுட்டுக்கு நன்றாக பரிச்சயமாக்கியது. அப்படத்தின் எல்.சி.யு கனெக்ட் மூலம் விஜய்யுடன் `லியோ' படத்திலும் நடித்திருந்தார். தற்போது பிக் பாஸ் வீட்டிலிருந்து வந்ததும் `கோட்' படப்பிடிப்பு தளத்தில் அவரை சந்தித்தது தொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருக்கிறார்.

maya
அவர், `` அந்த நாளில் நிகழ்ந்த அழகை நீர்த்துப் போகாமல் இருப்பதற்கு இந்த விஷயத்தை எனக்குள்ளேயே வைத்திருந்தேன். ஆனால் அந்த மனிதனின் அழகான மனம் குறித்துப் பேசுவது முக்கியமென எண்ணுகிறேன். `பிக் பாஸ்' வீட்டிலிருந்து வெளியே வந்தப் பிறகு `கோட்' படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதியை நான் சந்தித்தேன். அவர் என் வேலைகளை கவனித்து வருவதாகவும் தொடர்ந்து என்னை ஊக்குவிப்பதாகவும் நான் கேள்விப்பட்டேன்.



சிறிய ஆர்டிஸ்டாகிய என்னை அவர் செய்த இந்த விஷயங்களெல்லாம் ஈர்த்தது. அதனால் அவரைச் சந்திக்க சென்றேன். இதையெல்லாம் அவர் செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் செய்தார். இப்படியான தருணங்கள் என்னை தினமும் கடினமாக உழைக்க வலியுறுத்தும். அடுத்த தலைமுறையினருக்கு அவர் ஊக்கமளிக்கும் விதம் என்னையும் இன்ஸ்பயர் செய்தது. அவர் என்னிடம் `எல்லாம் ஓகேதான மா?' எனக் கேட்டார்." என நெகிழ்ந்து பதிவிட்டிருக்கிறார்.

Share this story