பிக்பாஸ் பிரபலத்திற்கு அடித்த லக்... இரண்டாவது முறையாக கிடைத்த வாய்ப்பு !

ameer

அஜித்தின் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலம் இரண்டாவது முறையாக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘துணிவு’ படத்திற்கு பிறகு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17-ஆம் தேதி தொடங்கவுள்ளது. 

ameer

இந்நிலையில் இந்த படத்தில் கடந்த சீசனில் பிக்பாஸில் பிரபலமான அமீர், கொரியோகிராஃப்ராக பணியாற்றவுள்ளாராம். அதோடு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. அஜித்தின் பரிந்துரையின் பேரில் இந்த வாய்ப்பு அமீருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ‘துணிவு’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் நடித்துள்ளார். 

விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ஜோடி, டான்ஸ் vs டான்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ், கிங்ஸ் ஆஃப் டான்ஸ் உள்ளிட்ட பல நடன நிகழ்ச்சிகிளில் கொரியோகிராஃப்ராக அமீர் பணியாற்றியுள்ளார். பிரபல நடன இயக்குனர் பிரபுதேவாவின் தீவிர ரசிகரான இவர், பல திரைப்படங்களுக்கும் நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story