பிக்பாஸ் கவின் நடிப்பில் 'டாடா'... ரிலீஸ் தேதி அறிவிப்பு !

dada

பிக்பாஸ் கவின் நடிப்பில் உருவாகியுள்ள 'டாடா' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகர் கவின். 'லிப்ட்' படத்தின் மூலம் கதாநாயகனாக அவர், தற்போது 'டாடா' படத்தில் தற்போது நடித்துள்ளார். இந்த படத்தில் ஒரு குழந்தைக்கு அப்பாவாக கவின் நடித்துள்ளார். இந்த படத்தை  அறிமுக இயக்குனர் கணேஷ் கே.பாபு என்பவர் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார்.

dada

மேலும் இந்த படத்தில் ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை ஒலிம்பியா மூவிஸ் சார்பில் எஸ்.அம்பேத் குமார் தயாரித்து வருகிறார். ஜென் மார்ட்டின் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். 

dada

இப்படத்தின் திரையரங்கு உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் பிப்ரவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story