3வது முறையாக அஜித்துடன் இணைகிறாரா பில்லா பட இயக்குனர்?

billa

அஜித் - விஷ்ணு வர்தன் யுவன் காம்போ மீண்டும் எப்போது இணையும் என கேள்விக்கு இயக்குனர் விஷ்ணு வர்தன் பதிலளித்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் தனது 63-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகன்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜூன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் மற்றும் ஸ்பெயினில் நடைபெற்று முடிவடைந்துள்ளது. பல்கேரியாவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் அஜித் மூன்று கதாப்பாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.அஜித்துடன் திரிஷா, அர்ஜுன் தாஸ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட நடிகர்கள் நடிக்கின்றனர்.ajith

தற்போது 'விடாமுயற்சி' படத்தில் நடித்துள்ளார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பொங்கல் பண்டிகை அன்று இப்படம் வெளியாக உள்ளது. பில்லா, ஆரம்பம் என இரண்டு சூப்பர்ஹிட் படங்களை இயக்குனர் விஷ்ணு வர்தன் இயக்கியுள்ளார். இவர்களுடைய கூட்டணி மீண்டும் எப்போது இணையும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள். இந்த நிலையில், சமீபத்தில் விஷ்ணு வர்தன் விழா ஒன்றில் பங்கேற்றுள்ளார். அப்போது, பில்லா 3 குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு "பில்லா 3 பண்ணல, அதுக்கு பதிலா அஜித் சார் கூட வேறொரு படம் பண்ணலாம்" என கூறியுள்ளார். பின் அஜித் - விஷ்ணு வர்தன் - யுவன் காம்போ மீண்டும் எப்போது இணையும் என கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த இயக்குனர் விஷ்ணு வர்தன் "பேசிட்டு இருக்கோம்" என கூறியுள்ளார். இது அஜித் ரசிகர்களுக்கு செம மாஸ் அப்டேட்டாக வந்துள்ளது.

Share this story