ஒரே நேரத்தில் 2 படங்களாகும் ஒரே நபரின் சுயசரிதை

ஒரே நேரத்தில் 2 படங்களாகும் ஒரே நபரின் சுயசரிதை 

ஆந்திர அரசியலில் மிகப்பெரிய அளவில் கோலார்ச்சியவர் மறைந்த முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டி. தற்போது அவரது மகன் ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவின் முதல்வராக ஆட்சி புரிந்து வருகிறார். 

ஒரே நேரத்தில் 2 படங்களாகும் ஒரே நபரின் சுயசரிதை 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மம்முட்டி நடிப்பில் யாத்ரா என்ற பெயரில் ஒய்.எஸ்.ராஜசேகர் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக வெளியானது. மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் யாத்ரா 2 என்ற பெயரில் தயாராகி வருகிறது. இந்த படத்தில் மம்முட்டியுடன் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் ஜீவா நடித்துள்ளார். இரண்டாம் பாகம் ஜெகன்மோகன் ரெட்டியின் அரசியல் பயணத்தை மையமாக வைத்து உருவாகி உள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இந்த படம் திரைக்கு வருகிறது. முதல் பாகத்தை இயக்கிய இயக்குனர் மகி ராகவ் தான் இந்த படத்தையும் இயக்குகிறார்.

ஒரே நேரத்தில் 2 படங்களாகும் ஒரே நபரின் சுயசரிதை 

இதனிடையே மற்றொரு பக்கம், பாலிவுட் இயக்குனர் ராம் கோபால் வர்மா இதே ஜெகன்மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து வியூகம் என்கிற பெயரில் படம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஜெகன்மோகன் ரெட்டியின் கதாபாத்திரத்தில் நடிகர் அஜ்மல் அமீர் நடித்துள்ளார்.ஒரே நேரத்தில் இப்படி இரண்டு இயக்குனர்கள் ஒரே நபரின் சுயசரிதையை படமாக எடுத்து வருவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அது மட்டுமல்ல யாத்ரா-2 படக்குழுவினருக்கு நடிகர் அஜ்மல், தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார் அஜ்மல்.

Share this story