தாய்லாந்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் ; ஸ்ருதிஹாசனின் புகைப்படங்கள் வைரல்

நடிகை சுருதிஹாசன் தனது பிறந்த நாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன் திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வருகிறார். கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார்.இவர் தமிழில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து இவர் 3, வேதாளம், புலி, பூஜை ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். மேலும் இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
லோகேஷ் கனகராஜுடன் ஆல்பம் ஒன்றிலும் நடித்திருந்தார். இவர் தமிழில் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதாவது ரஜினியின் மகளாக பிரீத்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், 39-வது பிறந்த நாளை தாய்லாந்தில் தனது நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். '2025 மாயாஜாலமான ஆண்டு. ஜனவரி மாதக் குழந்தையாக மகிழ்ச்சியாக இந்த ஆண்டை தொடங்குகிறேன். கூலி படப்பிடிப்பு குழுவுடன் கொண்டாடுவது இந்த ஆண்டு கூடுதல் சிறப்பு. ' என கொண்டாட்டப் புகைப்படங்களைப் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.