ப்ளாக்பஸ்டர் ஹிட்... - 3 நாட்களில் டிராகன் பட வசூல் எவ்வளவு தெரியுமா...?

dragon

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘டிராகன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்த தொகையை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.


இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.  திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.


 இந்த நிலையில் படத்தின் 3 நாள் வசூல் விவரத்தை படக்குழு அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மூன்றே நாட்களில் உலகளவில் 50.3 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் 100 கோடி ரூபாயை திரைப்படம் வசூலிக்கும் என
எதிர்ப்பார்க்கப்படுகிறது.
  

Share this story