`ப்ளடி பெக்கர்' படத்தின் டிரைலர் நாளை வெளியீடு
1729174850000
இயக்குனர் நெல்சன் தயாரிப்பில் கவின் `ப்ளடி பெக்கர்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். திரைப்படம் வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியாகவுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கவின் ஒரு பிச்சைகாரன் தோற்றத்தில் காணப்படுகிறார். இப்படத்திற்கு ஜென் மார்டின் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கவினுடன் ரெடின் கிங்ஸ்லி, மாருதி பிரகாஷ்ராஜ், சுனில் சுகாதா, அக்ஷயா ஹரிஹரன் மற்றும் பலர் நடித்துள்ளனர். திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது. இதுக்குறித்து படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.