தாத்தா என கலாய்த்த புளு சட்டை மாறன்.. சரியான பதிலடி கொடுத்த உலக நாயகன் கமல்ஹாசன்..!

1

திரைப்பட விமர்சகர் புளு சட்டை  மாறன் தனக்கு பிடிக்காதவர்களை மட்டும் லிஸ்ட் எடுத்து அவர்களை கேலியும் கிண்டலும் செய்து கலாய்த்து வருவார் என்பதும் பலரும் அறிந்த உண்மை.

அந்த வகையில் ’இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் தாத்தாவாகவும், ’கூலி’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் தாத்தாவாகவும் நடித்து வருகிறார் என்று மீம்ஸ்களை பதிவு செய்த நிலையில் அந்த மீம்ஸ்க்கு ’இரண்டு பேரும் உண்மையிலேயே தாத்தா தாண்டா’ என்று புளு சட்டை கேலி செய்திருந்தார். 

புளு சட்டை மாறனின் இந்த பதிவுக்கு கமல்ஹாசன் மறைமுகமாக கூறியபோது ’நான் இப்ப கூட தாத்தா தான், என் மகள் மனசு வைத்தால் என்று கூறியது தவறா? தாத்தா என்று சொன்னால் என்ன? நான் தாத்தா தானே, காந்தியையும் பெரியாரையும் தாத்தா என்றுதான் என்று சொல்வதால் அவர்கள் குறைந்து விட்டார்களா? அவங்க தாடிக்கு எல்லாம் டை அடிக்க முடியாது.

 உள்ளே இருக்கிற அவங்க மனசு வெள்ளை, வெளியே வந்துவிடும், தாத்தாவாக இருப்பதற்கு தான் நம்ம பயிற்சி எடுத்துக்கிட்டே இருக்கிறோம், நீங்களும் எடுத்துக்கிடனும், அது நாளை நடந்தே தீரும்’ என்று மறைமுகமாக புளு சட்டை மாறனுக்கு பதில் அளித்துள்ளார். இந்த பதிவை புளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Share this story