படப்பிடிப்பு காணொலியை பகிர்ந்த ப்ளூ ஸ்டார் படக்குழு

படப்பிடிப்பு காணொலியை பகிர்ந்த ப்ளூ ஸ்டார் படக்குழு

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்திருக்கிறார். இப்படத்திலிருந்து வெளியான ரயிலின் ஒலிகள் பாடல் பெரும் ஹிட் அடித்தது. 

null

இத்திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை படக்குழுவினர் தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர். 
 

Share this story