ப்ளூ ஸ்டார் படத்தின் டிரைலர் அறிவிப்பு
1704879274520

இயக்குனர் எஸ்.ஜெயகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'புளூ ஸ்டார்'. இப்படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஷாந்தனு முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும், கீர்த்தி பாண்டியன், பிரித்விராஜன், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லெமன் லீப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இப்படத்திலிருந்து வெளியான ரயிலின் ஒலிகள் பாடல் பெரும் ஹிட் அடித்தது.
இத்திரைப்படம் வரும் ஜனவரி 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் குறித்த அறிவிப்பு வௌியாகி இருக்கிறது. அதன்படி, நாளை மாலை படத்தின் டிரைலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.