போட் திரை விமர்சனம்.. கரை சேர்ந்தாரா யோகி பாபு?
1722594363845
சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் போட். இப்படத்தில் யோகிபாபு உடன் எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷான் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்திய சுதந்திரம் வாங்கும் முன் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் போட்மேனாக யோகிபாபு நடித்திருக்கிறார். போட் திரைப்படம் இன்று உலகமெங்கும் ரிலீஸ் ஆகி உள்ளது.
இன்று ‘போட்’ ரிலீஸ்.. அன்புள்ள அனைவருக்கும்.. pic.twitter.com/7Nbl94U6Pu
— Chimbu Deven (@chimbu_deven) August 2, 2024
யோகி பாபு படகோட்டியாக அசத்தலாக நடித்துள்ளார். அவரை தொடர்ந்து நூலகராக நடித்துள்ள எம்.எஸ். பாஸ்கர் ஸ்கோர் செய்கிறார். ஹீரோயினாக கெளரி கிஷன் அந்த கானா கர்நாடக சங்கீதம் பாடலில் ஸ்கோர் செய்து விட்டார். சாம்ஸ், ஷாரா, ஆங்கிலேய அதிகாரியாக நடித்துள்ள ஜெஸ்ஸி ஃபாக்ஸ் ஆலன், சின்னி ஜெயந்த், மதுமிதா மற்றும் லீலா என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஆளமான பின் கதையை அமைத்தும் அவர்களுக்கு எழுதப்பட்ட வசனங்களும் தான் இந்த படத்தின் மிகப்பெரிய பலமே. படகில் கடலுக்குள் நடக்கும் கதை என்பதால் போர் அடித்து விடாமல் இருக்கும் அளவுக்கு ஜிப்ரான் பின்னணி இசையில் பிரித்து மேய்ந்துள்ளார். லைஃப் ஆஃப் பை படத்தைப் போலவே படகை சுற்றியே படம் நகர்வதால் காட்சிகளை விட வசனங்கள் தான் படத்தை தாங்கிப் பிடிக்கின்றன. முதல் பாதியில் அது சுவாரஸ்யமாக இருந்தாலும், இரண்டாம் பாதியில் அதுவே சில இடங்களில் டல் அடித்து விடுகிறது. ஆனாலும், படத்தை முடிந்தவரை சுவாரஸ்யமாகக் கொண்டு சென்று தீவிரவாதி யார் என்கிற ட்விஸ்ட்டும் படகில் இருந்தவர்கள் என்ன ஆனார்கள் என்கிற பரபரப்பையும் கொடுத்த விதத்தில் இந்த 'போட்' பாராட்டுக்களை பெறுகிறது.