பாபி சிம்ஹா பிறந்தநாள்... 'நான் வயலன்ஸ்' படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியீடு

Boby sinha
தமிழில் மெட்ரோ மற்றும் கோடியில் ஒருவன் படங்களை இயக்கியவர் ஆனந்த கிருஷ்ணன். இவர் தற்போது இயக்கும் புதிய படத்தில் பாபி சிம்ஹா, மெட்ரோ சிரிஷ் மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தின் படத்திற்கு 'நான் வயலன்ஸ் {NON Violence}' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ் தமன் ஆகியோர் வெளியிட்டனர். 90-களில் நடக்கும் கதையான இது, மதுரை பின்னணியில் உருவாகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் படத்தின் ஹீரோ பாபி சிம்ஹா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி 'நான் வயலன்ஸ்' படத்தின் சிறப்பு போஸ்டரை வெளியிட்டு படக்குழு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.


 


 

Share this story