'இந்தியன் 2' படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா...

Indian 2

'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடிகர் பாபி சிம்ஹா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. 

Indian 2

நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான 'சூது கவ்வும்'  படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பாபி சிம்ஹா. அதன்பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான 'ஜிகர்தண்டா' நடித்தார். மதுரை கேங்ஸ்டராக நடித்த இவரின் கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. 

Indian 2

இதையடுத்து உருமீன், பெங்களுர் நாட்கள், கோ 2, சாமி 2 உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதைத்தொடர்ந்து தக்ஸ், தடை உடை, இராவண கல்யாணம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது ஷங்கர் மற்றும் கமல் கூட்டணியில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வருகிறார். அதில் பாபி சிம்ஹா நடிக்கும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. 

Indian 2

இதற்கிடையே நடிகர் பாபி சிம்ஹா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இந்நிலையில் 'இந்தியன் 2' படப்பிடிப்பில் நடிகர் பாபி சிம்ஹா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 

 

 

 

Share this story