இந்தியன் 2 படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா

இந்தியன் 2 படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா

நடிகர் பாபி சிம்ஹா, கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பீட்சா மற்றும் காதலில் சொதப்புவது எப்படி உள்ளிட்ட படங்களில் உள்ள தமிழ் திரை உலகில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து சூது கவ்வும், ஜிகர்தண்டா உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் பெற்றவர். குறிப்பாக ஜிகர்தண்டா படத்தில் இவரின் நடிப்புக்கு தேசிய விருது கிடைத்தது. கமல்ஹாசனின் இந்தியன் 2 திரைப்படத்திலும் நடித்துள்ளார்.இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் கோ 2 படம் போன்ற படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்தியன் 2 படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா

அதன் பிறகு தற்போது ராகேஷ் NS இயக்கத்தில் தடை உடை எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்துள்ளார். இந்த படத்தை முத்ராஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் சார்பில் பாபி சிம்ஹாவின் மனைவி ரேஷ்மி சிம்ஹா தயாரிக்கிறார். கே ஆர் சக்திவேல் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

இந்தியன் 2 படக்குழுவுடன் பிறந்தநாள் கொண்டாடிய பாபி சிம்ஹா

இதனிடையே, இன்று பிறந்தநாள் கொண்டாடும் பாபி  சிம்ஹாவுக்கு, திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்தியன் 2 திரைப்படக் குழுவினருடன் சேர்ந்து அவர் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்தியன் 2 படத்தில் காவல்துறை அதிகாரியாக முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Share this story