‘தடை உடை’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

பாபி சிம்ஹா நடிப்பில் தயாராகியுள்ள ‘தடை உடை’ படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

photo

அறிமுக இயக்குநரான ராகேஷ் இயக்கத்தில் தயாராகிவரும் படம்தடைஉடை’. அவர் இதற்கு முன்னர் சூது கவ்வும், எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் பாபி சிம்ஹா, கதாநாயகியாக மிஷா ரங் உள்ளிடோர் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து ரோகிணி, செந்தில், பிரபு, சந்தான பாரதி, செல் முருகன், சரத் ரவி தங்கதுரை, தீபக் ரமேஷ், மணிகண்ட பிரபு, சுப்பிரமணியம் சிவா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு அறிமுக இசையமைப்பாளரான ஸ்ரீ இசையமைத்துள்ளார்.   இந்த நிலையில் படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது, அதில் கோவில் கோபுரம், பாபி சிம்ஹாவின் படம் இடம் பெற்றுள்ளது. படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் சிவகங்கையில் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Share this story