ஓடிடியில் வெளியாகும் ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’... பாபி சிம்ஹா படத்தின் புதிய அறிவிப்பு !

THUGS
 பாபி சிம்ஹா நடிப்பில் வெளியான ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

‘ஹே சினாமிகா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரபல நடன இயக்குனர் பிருந்தா மாஸ்டர், ‘குமரி மாவட்டத்தின் தக்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பாபி சிம்ஹா கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் இப்படம் வெளியானது. 

THUGS

இந்த படத்தில் வில்லனாக ஆர்.கே.சுரேஷும், முக்கிய கதாபாத்திரத்தில் முனிஸ் காந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஹிருது ஹாரூன் ஆகியோரும் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தை எச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியாஷிபு என்பவர் தயாரித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தின் அடியாட்களுக்கு இடையே நடக்கும் வன்முறை சம்பவங்களை வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதம் இப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும்  மே 20-ஆம் தேதி ஜியோ சினிமாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story