சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகியுள்ள ‘வசந்தமுல்லை’... பாபி சிம்ஹா படத்தின் மிரட்டலான டிரெய்லர் !

பாபி சிம்ஹா நடிப்பில் உருவாகியுள்ள ‘வசந்தமுல்லை’ படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
குறும்பட இயக்குனர் ரமணன் புருஷோத்தமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வசந்தமுல்லை’. வித்தியாசமான கதைகக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக பாபி சிம்ஹா நடித்துள்ளார். நடிகர் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக புதுமுக நாயகி காஷ்மீரா பர்தேஷி நடித்துள்ளார். எஸ்.ஆர்.டி.எண்டர்டையின் மற்றும் முத்ராஸ் பிலிம் பேக்டரி இணைந்து தயாரித்து வரும் இப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்துள்ளார். தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழியில் வெளியாகவுள்ளது.
இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் 10-ஆம் தேதி வெளியாகியுள்ளது. இதையொட்டி இப்படத்தின் மிரட்டலான டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. சஸ்பென்ஸ் த்ரில்லரில் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தில் வெறித்தனமான நடிப்பை பாபி சிம்ஹா வெளிப்படுத்தியுள்ளார்.