ரஜினிக்கு வில்லனாகும் பாலிவுட் நடிகர்.. 5 மொழி நடிகர்கள் இணைவதால் எகிறும் எதிர்பார்ப்பு !

jailer

 ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தில் முத்துவேல் பாண்டியன் என்ற ஓய்வுபெற்ற ஜெயிலராக ரஜினி நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது கர்நாடக மாநிலம் மங்களூரில் நடைபெற்று வருகிறது. 

jailer

இந்த படத்திற்காக இரவு பகலாக நெல்சன் உழைத்து வருகிறார். இந்த படத்தை பிரம்மாண்டமாக உருவாக்க பல மாநில நடிகர்கள் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் மோகன்லால், சுனில், தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவ ராஜ்மோகன், யோகிபாபு. வசந்த் ரவி, விநாயக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். 

jailer

இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் பிரபல நடிகராக இருக்கும் அவர், விஜய்யின் ‘பிகில்’ படத்தில் வில்லனாக நடித்தவர். தற்போது மீண்டும் ‘ஜெயிலர்’ படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார். ஏற்கனவே தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மூன்று மொழி நடிகர்கள் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ள நிலையில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story