வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் பாலிவுட் நடிகர்

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் பாலிவுட் நடிகர் 

தமிழ் திரைப்படத்துறையில் குறைந்த அளவிலேயே படங்களை இயக்கி இருந்தாலும் அத்தனையும் சர்வதேச தரத்துக்கு இணையாக கொடுத்திருப்பவர் இயக்குனர் வெற்றிமாறன் மட்டுமே.  அதனால் இயக்குனர் கனவுடன் சினிமாவிற்குள் வரும் இளைஞர்கள் பெரும்பாலும் வெற்றிமாறனை தங்களது முன் மாதிரியாக எடுத்துக்கொண்டு அவரது படங்கள் மூலம் சினிமாவின் இலக்கணங்களை கற்று வருகின்றனர்.  தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் அவர் இயக்குநராக அறிமுகமானார். இப்படம் பெரும் வெற்றி பெற்றது. தனுஷின் திரைவாழ்விலும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, தனுஷை வைத்து மீண்டும் ஆடுகளம் என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, விசாரணை, வட சென்னை, அசுரன் படத்தை இயக்கினார்.  தற்போது விடுதலை இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். 

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படும் பாலிவுட் நடிகர் 

இந்நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்பது தனது நீண்ட நாள் கனவு என தெரிவித்துள்ளார். 
 

Share this story