சென்னை வரும் சன்னி லியோன்.. உற்சாகமான ரசிகர்கள் !

oh my ghost

 பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன் நாளை சென்னை வருகிறார். 

முதல்முறையாக தமிழில் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடித்துள்ள திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. ஹாரர் காமெடி படமாக உருவாகி வரும் இப்படத்தை வீரசக்தி மற்றும் சசிகுமார் ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யுவன் இயக்கி வருகிறார்.

oh my ghost

இந்த படத்தில் சன்னி லியோனுடன் காமெடி நடிகர்கள் சதிஷ், யோகிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் நடிகை தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக், டிக்டாக் புகழ் ஜி.பி.முத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

oh my ghost

அஜீஷ் அசோக் என்பவர் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நாளை நடிகை சன்னி லியோன் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Share this story