பாலிவுட் நடிகை தீபிகா கக்கருக்கு கல்லீரல் புற்றுநோய்...!

பிரபல இந்தி சின்னத்திரை நடிகை தீபிகா கக்கருக்கு கல்லீரல் புற்றுநோய் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
நடிகை தீபிகா கக்கர் இந்தியில், ஏராளமான சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் கணவர் சோயிப் இப்ராஹிமும் சின்னத்திரை நடிகர். இந்நிலையில் தனக்குக் கல்லீரலில் புற்றுநோய் இருப்பதாக தீபிகா கக்கர் தெரிவித்துள்ளார்.இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “வயிற்றின் மேல் பகுதியில் வலி ஏற்பட்டதால் மருத்துவமனை சென்றேன். பரிசோதனையில், டென்னிஸ் பந்து அளவிலான கட்டி கல்லீரலில் இருப்பது கண்டறியப்பட்டது. அது 2-ம் நிலை புற்றுநோய் கட்டி என்பது தெரிய வந்தது. இது, எனது கடினமான காலங்களில் ஒன்று.
என் குடும்பம் எனக்கு ஆதரவாக இருக்கிறது. உங்கள் அன்பால் இதிலிருந்து மீண்டு வருவேன். எனக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகத் தெரிவித்துள்ளனர்.