சிம்புவிற்கு ஜோடியாகும் பாலிவுட் நடிகை.. ‘STR 48’ சூப்பர் அப்டேட்

str 48

 சிம்பு நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் கதாநாயகி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் பிரபலமான தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது.  கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

str 48

இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் தொடங்கவுள்ளது. தற்போது இந்த படத்திற்கான லோகேஷன் பார்க்கும் பணியில் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி ஈடுபட்டுள்ளார். பிரம்மாண்ட வரலாற்று படமாக உருவாகும் இந்த படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ளது. தமிழ் தெலுங்கு ஹிந்தி என ஐந்து மொழியில் பான் இந்தியா திரைப்படமாக ஏற்படும் உருவாக உள்ளது.‌ 

str 48

இந்தப் படத்திற்கான நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தீபிகாவை சந்தித்த இயக்குனர் தேசிங்கு பெரியசாமி படத்தின் கதையை கூறியதாக தெரிகிறது. கதை பிடித்திருப்பதாலும், சிம்பு படம் என்பதால் அவர் விரைவில் இந்த படத்தில் இணைவார் என கூறப்படுகிறது. பிரபல பாலிவுட் நடிகையாக இருக்கும் தீபிகா, ரஜினியுடன் ‘கோச்சுடையான்’, ஷாருக்கானுடன் மும்பை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Share this story